/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொது மன்னிப்புத் திட்டம் நீட்டிக்க வர்த்தகர்கள் விருப்பம்
/
பொது மன்னிப்புத் திட்டம் நீட்டிக்க வர்த்தகர்கள் விருப்பம்
பொது மன்னிப்புத் திட்டம் நீட்டிக்க வர்த்தகர்கள் விருப்பம்
பொது மன்னிப்புத் திட்டம் நீட்டிக்க வர்த்தகர்கள் விருப்பம்
ADDED : பிப் 15, 2024 05:50 AM
மதுரை: ''வணிகர்களுக்கான பொது மன்னிப்புத் திட்டத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்'' என மதுரை
மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: வரி நிலுவைத் தொகை தீர்ப்பதற்கான தமிழக அரசின் சமாதானத்
திட்டத்தின் கீழ் வாட் வரி, அபராதம், வட்டி நிலுவை வைத்துள்ள வணிகர்களுக்கான பொது மன்னிப்புத் திட்டம் 2023 அக்.16 முதல் 2024 பிப். மாதம் 14 வரை வழங்கப்பட்டது. திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 90 ஆயிரம் பேர் ரூ.50 ஆயிரத்திற்கு கீழே உள்ள வாட் நிலுவைத் தொகை வட்டி அனைத்தும் செலுத்தாமல் பயன் பெற்றுள்ளனர்.
மீதி உள்ளோர் 20 முதல் 30 சதவீதம் கட்ட வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். இதில் தற்போது வழக்கு நிலுவையில் உள்ளவர்களும் பயன்பெறும் வகையில் பொது மன்னிப்பு திட்டத்தை ஜூன் வரை நீட்டிக்க வேண்டும்.
மேலும் 2021 மார்ச் 31 வரை நோட்டீஸ் வழங்கியவர்களுக்கு மட்டும் பயன்பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை 2023 மார்ச் 31 வரை நோட்டீஸ் கொடுத்தவர்களுக்கும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.

