நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தானம் அறக்கட்டளையின் பாரம்பரிய சுற்றுலா மையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீர் நிலைகளில் பாரம்பரிய நடை பயணம் மதுரையில் நடந்தது.
பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளம், கள்ளிக்குடி வட்டாரத்தில் லைலாபுரம் நீர் நிலை, மதுரை நகர்ப்புறம் முத்துப்பட்டி ஊருணி, திருப்புவனம் ராஜசிங்க குளம், நெல்முடி கரை பழைய கண்மாய்க்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். கண்மாய்களின் வரலாற்று பின்னணியை மதுரை காமராஜ் பல்கலை வரலாற்றுத் துறை ஓய்வு பேராசிரியர் சேதுராமன், தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம் விளக்கினர். ஒருங்கிணைப்பாளர் வாசுநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.

