/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காமராஜர் சாலை, கீழவெளிவீதி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமல்
/
காமராஜர் சாலை, கீழவெளிவீதி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமல்
காமராஜர் சாலை, கீழவெளிவீதி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமல்
காமராஜர் சாலை, கீழவெளிவீதி சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமல்
ADDED : செப் 30, 2025 04:26 AM
மதுரை: மதுரை கீழவெளிவீதி சந்திப்பு, காமராஜர் சாலையில் இன்று (செப்.30) முதல் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் சாலையில் கழிவுநீர் கால்வாயின் மேல்புறம் அமைத்த கான்கிரீட் தளம் பழுதடைந்துள்ளது. அதை சீரமைக்கும் பணி துவங்கி கீழவெளிவீதி சந்திப்பு முதல் அரசமரம் பிள்ளையார் கோயில் வரையான சாலையில் பணி நிறைவடைந்தது.
அடுத்த கட்டமாக முனிச்சாலை சந்திப்பில் இருந்து கீழவெளிவீதி சந்திப்பு வரையான சலையில் தற்போது கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவங்க உள்ளதால், இச்சாலை வழியாக செல்லும் வாகனங்களை தற்காலிகமாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முனிச்சாலை சந்திப்பில் இருந்து கீழவெளிவீதி சந்திப்பு வரையான சாலை தற்காலிகமாக மூடப்படுகிறது. இவ்வழியாக கீழவெளிவீதி சந்திப்பு செல்லும் வாகனங்கள், முனிச்சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பழைய குயவர் பாளையம் சாலை வழியாக செயின்ட் மேரீஸ் பள்ளி சந்திப்பு செல்லும் வகையில் வழிசெய்யப்பட்டுள்ளது.
மஹால் ரோட்டில் இருந்து செயின்ட் மேரீஸ் சந்திப்பு, பழைய குயவர்பாளையம் சாலை வழியாக முனிச்சாலை சந்திப்பு செல்லும் வாகனங்கள், விளக்குத்துாண் வாசன் சந்திப்பு, கீழவாசல் சந்திப்பு வழியாக காமராஜர் சாலையில் செல்ல வேண்டும்.
அண்ணாசிலை சந்திப்பில் இருந்து கீழவெளிவீதி வழியாக கீழவாசல் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, காமராஜர் சலைக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்கள், அரசு பஸ்கள் அம்சவள்ளி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி முனிச்சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலைக்கு செல்ல வேண்டும். மற்ற வாகனங்கள் கீழவாசல் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காமராஜர் சாலையில் செல்லலாம்.
இந்த தற்காலிக மாற்றம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.