/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
/
கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
ADDED : நவ 20, 2024 05:22 AM
மதுரை : மதுரை கோரிப்பாளையம் மேம்பால கட்டுமான பணிகளின் ஒருபகுதியாக தேவர் சிலை இடதுபுறம் சங்கீத் பிளாசா ஓட்டல் மற்றும் பனகல் சாலை சந்திப்பில் புதிதாக பில்லர் கட்டுமான பணிகள் நடக்க உள்ளன.
இதையொட்டி இன்று(நவ.20) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, மதுரை நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
* நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோட்டில் இருந்து வரும் டவுன்பஸ்கள், கார்கள், டூவீலர்கள் அவுட்போஸ்ட் வழியாக தமுக்கம் சந்திப்பு வந்து, வலதுபுறம் திரும்பி ஓட்டல் நார்த்கேட், கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக ஏ.வி. பாலம் செல்ல வேண்டும். காந்தி மியூசியம் ரோட்டிலும் செல்லலாம்.
* மாட்டுத்தாவணியில் இருந்து வரும் வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச், ஆவின்சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை, வைகை வடகரை ரோடு, செல்லுார் ரவுண்டானா, தத்தனேரி மெயின்ரோடு வழியாக ஆரப்பாளையம் செல்ல வேண்டும்.
* நத்தம், அழகர்கோவில் ரோடு வழியாக ஆரப்பாளையம், பெரியார் பஸ்ஸ்டாண்ட் செல்லும் கனரக, வணிகபயன்பாட்டு வாகனங்கள் அவுட்போஸ்ட், மாவட்ட நீதிமன்றம், கே.கே.நகர் ஆர்ச், ஆவின்சந்திப்பு, பனகல் ரோடு, கோரிப்பாளையம் சந்திப்பு, ஏ.வி.பாலம் வழியாக வந்து கீழவெளி வீதி, யானைக்கல், வடக்கு மாரட் வீதி செல்ல வேண்டும்.
* கோரிப்பாளையத்தில் இருந்து தத்தனேரி பகுதி செல்லும் அனைத்து வாகனங்களும் கோரிப்பாளையம், மீனாட்சி அரசு கல்லுாரி ரோடு, வைகை வடகரை ரோடு, குமரன் ரோடு வழியாக செல்லுார் கபடி ரவுண்டானா செல்ல வேண்டும்.
பாலம் ஸ்டேஷன் ரோட்டில் மாற்றம்
* செல்லுார் கபடி ரவுண்டானா முதல் புதுப்பாலம் இறக்கம் வரை, மேளக்காரத் தெரு பகுதியில் கான்கிரீட் பில்லர்களின் உத்திரங்கள் அமைக்கும் பணி நடக்க உள்ளது. எனவே இங்கும் இன்று முதல் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
* புதுப்பாலம் வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, யானைக்கல் பாலம் இறக்கத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டு, பெரியார் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் வரிசையாக ஒருவழிப்பாதையாக செல்ல அனுமதிக்கப்படும். வழக்கம்போல பெரியார் பஸ்ஸ்டாண்ட் மற்றும் தத்தனேரி பாலம் வழியாக வரும் வாகனங்கள் எம்.எம்.லாட்ஜ், இ2 இ2 சாலை, அரசன் பேக்கரி, நவநீதகிருஷ்ணன் கோயில் சந்திப்பு, கோகலே ரோடு, ஐ.ஓ.சி., ரவுண்டானா வழியாக வந்து நத்தம் ரோடு, அழகர்கோயில் ரோடு, மாட்டுத்தாவணி செல்ல வேண்டும்.
* பெரியார் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி செல்லும் இருசக்கர வாகனங்கள் சிம்மக்கல், தைக்கால் தெரு, எம்.ஜி.ஆர்.பாலம், வைகை வடகரை ரோடு, குமரன் ரோடு, பாலம் ஸ்டேஷன் ரோடு வழியாக செல்லலாம்.
* பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து தெப்பக்குளம் செல்லும் இருசக்கர வாகனங்கள் சிம்மக்கல், தைக்கால் தெரு, திருமலைராயர் படித்துறை, பாலம் வலதுபுறம் இறக்கம், வைகை தென்கரை ரோடு, குருவிக்காரன் ரோடு சந்திப்பு வழியாக செல்லலாம்.
மேலும் அண்ணாநகர், மாட்டுத்தாவணி நோக்கி செல்லும் இருசக்கர வாகனங்கள் சிம்மக்கல், தைக்கால் தெரு, திருமலைராயர் படித்துறை பாலம் வலதுபுறம் இறக்கம், வைகை தென்கரை ரோடு, ஓபுளா படித்துறை பாலம், குருவிக்காரன் ரோடு பாலம் வழியாக நகரின் வடபகுதிக்கு செல்லலாம்.