/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்
/
மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்
ADDED : அக் 29, 2025 06:50 AM

மதுரை: பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் ஜெயந்தி யையொட்டி அக்.30ல் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இதையடுத்து கோரிப்பாளையம் சந்திப்பில் அனைத்து வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட உள்ளது.
தேவர் ஜெயந்தி விழாவுக்கு வரும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு எம்.எம்., லாட்ஜ் சந்திப்பு, தமுக்கம் சந்திப்பு, சிவசண்முகம் பிள்ளை சாலை சந்திப்பு, மீனாட்சி கல்லுாரி தரைப்பாலம் சந்திப்பு ஆகிய சாலைகளில் இருந்து கோரிப்பாளையம் சந்திப்புக்கு செல்ல அனுமதி இல்லை.
கனரக சரக்கு வாகனங்கள் இன்று (அக்.29), நாளை (அக்.30) ஆகிய நாட்களில் லாரிகள், கனரக சரக்கு வாகனங்கள், காலை 6:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை நகருக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் மதுரை நகருக்கு வெளியே உள்ள சுற்றுச்சாலைகளை பயன்படுத்தி செல்லும் இடங்களுக்கு செல்லலாம்.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் தத்தனேரி மெயின் ரோடு, தமுக்கம், வள்ளுவர் சிலை சந்திப்பில் இருந்து வரக்கூடிய ஆம்புலன்ஸ்கள் வழக்கமான வழியிலேயே செல்லலாம்.
தேவர் ஜெயந்திக்காக ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் நகருக்குள் செல்ல போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர பிற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக பசும்பொன் செல்லும் வாகனங்கள் அனைத்தும் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாகவே செல்ல வேண்டும்.
சிட்டி, மொபசல் பஸ்கள் அரசு நகர், புறநகர் பஸ்கள் மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியார் பஸ்ஸ்டாண்ட், ஆரப்பாளையம் செல்லும் சிட்டி பஸ்கள் கே.கே.நகர் ஆர்ச், ஆவின்சந்திப்பு, குருவிக்காரன் சாலை பாலம் வழியாக கணேஷ் தியேட்டர் சந்திப்பு சென்று காமராஜர் ரோடு வழியாக 144 சந்திப்பு, செயின்ட் மேரீஸ் பள்ளி சந்திப்பு வழியாகவும், ஆரப்பாளையம் செல்லும் சிட்டி பஸ்கள் முனிச்சாலை சந்திப்பில் இருந்து முனிச்சாலை ரோடு வழியாக அம்சவள்ளி சந்திப்பு சென்று வலதுபுறம் திரும்பி யானைக்கல், வடக்குமாரட் வீதி வழியாக செல்ல வேண்டும்.
மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்த கோரிப்பாளையம் வழியாக ஆரப்பாளையம் செல்லும் மொபசல் பஸ்கள் கே.கே.நகர் ஆர்ச், ஆவின்சந்திப்பு, ஏ1 பார் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை வழியாக கபடி ரவுண்டானா சென்று தத்தனேரி பாலம் வழியாக ஆரப்பாளயைம் செல்ல வேண்டும்.
நத்தம், அழகர்கோயில் சாலையில் இருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியார் பஸ்ஸ்டாண்ட், ஆரப்பாளையம் செல்லும் சிட்டி பஸ்கள் பெரியார் சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி ராஜாமுத்தையா மன்றம், டாக்டர் தங்கராஜ் சாலை, காந்திமியூசியம், அண்ணா பஸ்ஸ்டாண்ட், பனகல் சாலை, சிவசண்முகம் பிள்ளை சாலை வழியாக வைகை வடகரை சாலை சென்ற ஓபுளா படித்துறை பாலம் வழியாக வைகை தென்கரைக்கு சென்று வலதுபுறம் திரும்பி யானைக்கல் வழியாக செல்ல வேண்டும்.
பெரியார் பஸ்ஸ்டாண்டில் இருந்து யானைக்கல், புதுப்பாலம் வழியாக நத்தம் சாலை, அழகர் கோயில் சாலை, மேலுார் சாலைகளுக்கு செல்லும் அரசு சிட்டிபஸ்கள் வழக்கம்போல எம்.எம்.லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி எப்.எப்.ரோடு, அரசன் ஸ்வீட்ஸ், ஓ.சி.பி.எம்., பள்ளி சந்திப்பு, கோகலே ரோடு, ஐ.ஓ.சி., ரவுண்டானா வழியாக செல்லலாம்.
எம்.எம்.லாட்ஜ் சந்திப்பில் இருந்து கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக அண்ணா பஸ்ஸ்டாண்ட் செல்லும் சிட்டி பஸ்கள் எம்.எம். லாட்ஜ் சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி எப்.எப். ரோடு, அரசன் ஸ்வீட்ஸ், ஓ.சி.பி.எம். பள்ளி சந்திப்பு, கோகலே ரோடு, ஐ.ஓ.சி., ரவுண்டானா வழியாக ராஜா முத்தையா மன்றம், டாக்டர் தங்கராஜ் சாலை வழியாக செல்லலாம்.
ஆரப்பாளையத்தில் இருந்து மாட்டுத்தாவணி செல்லும் மொபசல் பஸ்கள் அனைத்தும் ஜெ., பாலம் வழியாக கொன்னவாயன் சாலை, கூடல்புதுார் பாலம் வழியாக அலங்காநல்லுார் ரோட்டில் சென்று, வானொலி நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, ஆனையூர், பனங்காடி, ஐயர்பங்களா சந்திப்பு, மூன்றுமாவடி சந்திப்பு, சர்வேயர் காலனி சந்திப்பு, 120 அடி ரோடு வழியாக செல்லலாம்.
ஆரப்பாளையத்தில் இருந்து மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் செல்லும் மொபசல் பஸ்கள் ஜெ., பாலம், கொன்னவாயன் சாலை, தத்தனேரி பாலம், கபடி ரவுண்டானாவில் இருந்து வைகை வடகரை வந்து வலதுபுறம் திரும்பி தத்தனேரி பாலத்தின் கீழ் உள்ள சாலை வழியாக குலமங்கலம் சாலை சென்று, வருமான வரி அலுவலகம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பீபிகுளம் சந்திப்புக்கு சென்று வடமலையான் மருத்துவமனை வழியாக எஸ்.பி., பங்களா சந்திப்பு, தாமரைத்தொட்டி, நீதிமன்றம் வழியாக மாட்டுத்தாவணி செல்லலாம்.
இருசக்கர வாகனங்கள் மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியார் பஸ்ஸ்டாண்ட், ஆரப்பாளையம் செல்லும் பொதுமக்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு ஏ.1 பார் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, வைகை வடகரை சாலை சென்று ஓபுளா படித்துறை பாலம் வழியாக வைகை தென்கரைக்கு சென்று வலதுபுறம் திரும்ப யானைக்கல் வழியாக செல்லலாம்.
பெரியார் பஸ்ஸ்டாண்டில் இருந்து யானைக்கல், புதுப்பாலம் வழியாக நத்தம் சாலை, அழகர்கோயில் சாலை, மேலுார் சாலைகளுக்கு செல்லும் இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் தற்போதுசெல்லும் வழித்தடம் வழியாக செல்லலாம்.
எம்.எம்.சந்திப்பில் இருந்து கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக அண்ணா பஸ்ஸ்டாண்ட் செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் எம்.எம்.லாட்ஜில் இருந்து, இடதுபுறம் திரும்பி எப்.எப்.ரோடு, அரசன் ஸ்வீட்ஸ், ஓ.சி.பி.எம். பள்ளி சந்திப்பு, பெரியார் மாளிகை, காந்தி மியூசியம் வழியாக செல்ல வேண்டும்.
ஆரப்பாளையம், பாத்திமா கல்லுாரியில் இருந்து நத்தம் சாலை, அழகர் கோயில் சாலை, மேலுார், பனகல் சாலைக்கு செல்லும் பொது மக்களின் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் கொன்னவாயன் சாலை, தத்தனேரிபாலம், கபடி ரவுண்டானாவில் இருந்துவலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை, குலமங்கலம் சாலை சென்று வருமான வரி அலுவலகம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பீபிகுளம் சந்திப்பு வழியாக வடமலையான் மருத்துவமனை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பீபிகுளம் சந்திப்பு வழியாக வடமலையான் மருத்துவமனை, எஸ்.பி., மருத்துவமனை, எஸ்.பி.சந்திப்பு சென்று செல்லலாம்.
மேற்கண்ட பகுதியில் இருந்து பாத்திமா கல்லுாரியில் இருந்து நத்தம் சாலை, அழகர்கோயில் சாலைபகுதிக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள் செல்லுார் கபடி ரவுண்டானா, எம்.எம்.லாட்ஜ் சந்திப்பு சென்று மேற்கூறிய வழித்தடங்களை பயன்படுத்தி செல்லலாம் அல்லது கபடிரவுண்டானாவில் வலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை வழியாக செல்லலாம். இந்த மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

