/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெத்தானியாபுரம் சந்திப்பில் சிக்னல் இல்லாமல் போக்குவரத்து சோதனை முறை அமல்

ADDED : டிச 11, 2024 06:15 AM

மதுரை: மதுரை பைபாஸ் ரோடு, ஆரப்பாளையம் ரோடு சந்திப்பில் (பெத்தானியாபுரம்) சிக்னல் இல்லாமல் வாகனங்கள் செல்லும் வகையில் நேற்று சோதனை முறையில் போக்குவரத்தை மாற்றி அமைத்து போலீசார், நெடுஞ் சாலைத் துறையினர் கண்காணித்தனர்.
ஆரப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் பைபாஸ் ரோடு சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி 100 மீ., தொலைவில் 'யூ டர்ன்' அடித்து பாத்திமா கல்லுாரி நோக்கி செல்ல வேண்டும்.
காளவாசல் பகுதியில் இருந்து ஆரப்பாளையம் செல்லும் வாகனங்கள் தற்போதைய சிக்னலை அடுத்து 70மீ., சென்று வலது புறமாக 'யூ டர்ன்' அடித்து ஆரப்பாளையம் செல்ல வேண்டும். அதேபோல் காளவாசல் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அரசரடிக்கு செல்ல குரு தியேட்டர் முன்பாக 'யூ டர்ன்' அடித்து செல்லலாம்.
பைபாஸ் ரோடு - ஆரப்பாளையம் ரோடு சந்திப்பு சிக்னல் பகுதியில் பாதசாரிகள் ரோட்டை கடக்க 25 நொடிகள் சிக்னல் இயக்கப்படும்.