/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிளாட்பாரம் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்
/
பிளாட்பாரம் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்
ADDED : ஆக 20, 2025 06:56 AM
மதுரை : திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம் பணி காரணமாக இன்று (ஆக.,20) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பாலக்காடு-- திருச்செந்துார் ரயில் (16731), கோவில்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் திருச்செந்துார்- பாலக்காடு ரயில் (16732) கோவில்பட்டியில் இருந்து மதியம் 2:35 மணிக்கு புறப்படும். இரு ரயில்களும் கோவில்பட்டி-- திருச்செந்துார் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
செங்கோட்டை-- திருநெல்வேலி (56742), திருநெல்வேலி- செங்கோட்டை (56743) ஆகிய இரு ரயில்களும் சேரன்மகாதேவி -- திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
திருநெல்வேலி -- திருச்செந்துார் ரயில் (56729), முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம் சென்ட்ரல் -- திருச்சி இன்டர்சிட்டி ரயில் (22628), மேலப்பாளையம் ஸ்டேஷனில் 50 நிமிடங்கள் நின்று, தாமதமாக செல்லும்.