/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பராமரிப்பு பணிகளால் ரயில்கள் சேவையில் மாற்றம்
/
பராமரிப்பு பணிகளால் ரயில்கள் சேவையில் மாற்றம்
ADDED : அக் 31, 2025 02:49 AM
மதுரை:  மதுரைக் கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பரில் ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து n ↓நவ., 7, 8, 9, 10, 12, 14, 15, 16ல் மதுரை - ராமேஸ்வரம் - மதுரை ரயில்கள் (56713/56714), முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி ரத்து n ↓ நவ., 7, 8, 9, 10, 12, 14, 15, 16ல் திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி ரயில்கள் (16849/16850), மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகின்றன.
n ↓அக்., 31 (இன்று) முதல் நவ., 29 வரை (செவ்வாய் தவிர்த்து) ஈரோடு - செங்கோட்டை (16845), நவ., 1 முதல் 30 வரை (புதன் தவிர்த்து) செங்கோட்டை - ஈரோடு (16846) ஆகிய ரயில்கள் செங்கோட்டை - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகின்றன.
மாற்றுப்பாதை n ↓நவ., 1 முதல் 30 வரை, (புதன் தவிர்த்து) செங்கோட்டை - மயிலாடுதுறை (16848), ஞாயிறு, வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.எம்.டி., (16352), வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் குமரி - ஐதராபாத் (07229), சனிக்கிழமைகளில் இயக்கப்படும் குமரி - ஹவுரா (12666) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படுகின்றன.
n ↓ நவ., 1, 6, 8, 11, 13, 15, 18, 20ல் நாகர்கோவில் - கோவை - நாகர்கோவில் (16321/16322), நவ., 1, 8, 15ல் நாகர்கோவில் - காச்சிகுடா (16354), நவ., 11, 18ல் நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., (16340) ஆகிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக இயக்கப்படுகின்றன.
n ↓ நவ., 1, 8, 11, 15, 18ல் மயிலாடுதுறை - செங்கோட்டை (16847), நவ., 9, 16ல் பனாரஸ் - கன்னியாகுமரி (16368) ஆகிய ரயில்கள் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படுகின்றன.
n ↓நவ., 4, 11, 18ல் ஓகா - ராமேஸ்வரம் ரயில் (16734), கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயக்கப்படும். நவ., 6, 13, 20ல் மதுரை - பிகானீர் ரயில் (22631) மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
n ↓அக்., 31 முதல் நவ., 29 வரை (நவ., 3, 4, 11, 18, 25 தவிர்த்து) குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயில் (16128) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
தாமதம் n ↓ நவ., 1, 8, 11, 15, 18ல் மதுரை - சென்னை எழும்பூர் 'தேஜஸ்' ரயில் (22672), 45 நிமிடங்கள் தாமதமாக மாலை 4:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும்.
n ↓ நவ., 27ல் மதுரை - பிகானீர் ரயில் (22631) 25 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12:30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும்.
சிறப்பு ரயில் n ↓பயணிகள் வசதிக்காக தினமும், (புதன் தவிர்த்து) அதிகாலை 5:10 மணிக்கு செங்கோட்டை - மதுரை (06846), (செவ்வாய் தவிர்த்து) மாலை 6:00 மணிக்கு மதுரை - செங்கோட்டை (06845) ஆகிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

