ADDED : டிச 24, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:சபரிமலை சீசனை முன்னிட்டு தாம்பரம் - கொச்சுவேலி இடையே மதுரை, கொல்லம் வழியாக இயக்கப்படும் ஏ.சி., சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, வெள்ளி தோறும் தாம்பரத்தில் இருந்து இரவு 7:30 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி சிறப்பு ரயில் (06035) ஜன.,31 வரை, ஞாயிறு தோறும் மதியம் 3:25 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும் தாம்பரம் சிறப்பு ரயில் (06036) பிப்., 2 வரை நீட்டிக்கப்படுகிறது.