ADDED : அக் 11, 2024 05:21 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி வட்டார வேளாண் துறை சார்பில் குட்லாடம்பட்டியில் வேளாண் முன்னேற்ற குழு ராபி பருவ பயிற்சி முகாம் விவசாயிகளுக்கு நடந்தது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் தாமரைச்செல்வி தலைமை வகித்தார். தோட்டக்கலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிரந்தர பந்தலில் கொடி வகைகள் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் நோய்கள், பூச்சிகள் மேலாண்மை குறித்து விளக்கினார். துணை தோட்டக்கலை அலுவலர் முத்துக்குமார் மா சாகுபடியில் கிளைகள் மேலாண்மை குறித்தும், உதவி அலுவலர் சிவக்குமார் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மானியங்கள் குறித்தும், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம், துவரை, தக்கை பூண்டு, சணல் பை பயன்கள் குறித்தும் விளக்கினர்.
உதவி தொழில்நுட்ப மேலாளர் அருணாதேவி நன்றி கூறினார்.