ADDED : அக் 24, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கள்ளிக்குடி வேளாண் துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண் திட்டத்தின் கீழ் செங்கப்படையில் சிறுதானிய பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த விஞ்ஞானிகள், விரிவாக்க பணியாளர்கள், விவசாயிகள் இணைப்பினை வலுப்படுத்தும் பயிற்சி முகாம் நடந்தது.
மதுரை வேளாண் கல்லுாரி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஜோதிலட்சுமி, கள்ளிக்குடி வேளாண் அலுவலர் கீதா, துணை அலுவலர் குமாரி லட்சுமி, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் இந்திரா தேவி, உதவி வேளாண் அலுவலர் திவ்யா கலந்து கொண்டனர். பின்னர் மாணவர்கள் விவசாயிகள் அலுவலர்கள் கலந்து கொண்ட சிறு தானியங்கள் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் நடந்தது. ஏற்பாடுகளை அலுவலர்கள் லாவண்யா, யுவராஜ் குமரன் செய்திருந்தனர்.