ADDED : மார் 08, 2026 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் விவசாயிகளுக்கு மாநில அளவிலான பயிற்சி முகாம் நடந்தது.
மூன்று நாட்கள் நடந்த முகாமிற்கு கொட்டாம்பட்டி விவசாயிகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவி தொழில் நுட்ப மேலாளர் கண்ணன் அழைத்துச் சென்றனர். நிலக்கடலை, எண்ணெய் வித்து பயிர்களில் புதிய ரகம், மதிப்புக் கூட்டுதல் தொழில் நுட்பங்கள், விதை நேர்த்தி, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் உரமேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

