ADDED : டிச 19, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில், மைக்ரோ சாப்ட்பவர் பி.ஐ. டேட்டா அனலிடிக்ஸ் என்ற தலைப்பில் கல்லுாரி பேராசிரியர்களுக்கான ஐந்து நாட்கள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
கல்லுாரிச் செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். முதல்வர் ராமசுப்பையா அறிமுக உரையாற்றினார். இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தார். பேராசிரியர் நிரஞ்சனி வரவேற்றார். ஐ.சி.டி. அகாடமி சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் முரளிராஜன் பேசினார். பயிற்சியாளர் சுமதி பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். பேராசிரியர் ராஜேஸ்வரி நன்றி கூறினார். பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்றனர்.