ADDED : செப் 29, 2025 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : கிடாரிப்பட்டி லதா மாதவன் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி முகாம் செயல் இயக்குனர் தினேஷ் தலைமையில் நடந்தது.
மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ் சேர்மன் உதயகுமார் பயிற்சி அளித்தார். மாணவர்கள் அலைபேசியை பயன்படுத்தி படிப்பது, செய்முறை பயிற்சி, மாணவர்கள் செய்யும் ஆராய்ச்சி சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் பயிற்சி அளிப்பது குறித்து எடுத்துரைத்தார். செயல் அலுவலர்கள் முத்துமணி, மீனாட்சி சுந்தரம், காந்தி நாதன், பொறியியல், கலை, பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு அலுவலர்கள் சேதுராஜ், சுதா செய்திருந்தனர். செயல் அலுவலர் பிரபாகரன் நன்றி கூறினார்.