ADDED : நவ 21, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் மாவட்டத்திலுள்ள 118 பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி முகாம் துவங்கியது. முதன்மை கல்வி அலுவலர் தயாளன் துவக்கி வைத்தார்.
டி.ஐ.இ.டி., முதல்வர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். துணை முதல்வர் மணிவண்ணன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சந்திரன் சிறப்புரையாற்றினார். டி.ஐ.இ.டி., விரிவுரையாளர்கள் அம்பிகா, இந்துமதி, ஆசைக்கண்ணன், சித்ரா தேவி, கலைவாணி, ஜான்சன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். விரிவுரையாளர் அன்பு ராஜா நன்றி கூறினார். பேராசிரியர்கள் விஜயகுமார், பரிமளா தேவி, உதவியாளர் பாபு முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

