ADDED : செப் 19, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வேதியியல் துறை, கெம் ஸ்பெக்ட்ரா மாணவர் சங்கம் சார்பில் சாம்பிராணி , வலி நிவாரண தைலம், மெழுகுவர்த்தி தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
தலைவர் விஜயராகவன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீதர், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். வேதியியல் துறை தலைவர் லட்சுமி கிருத்திகா வரவேற்றார். தியாகராஜர் கல்லுாரி இணைப் பேராசிரியர் புவனேஸ்வரி பயிற்சி அளித்தார். 100க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.
