நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாாியில், படிக்கும் காலத்தில் கூடுதல் ஆற்றலை வளர்த்துக்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நிதியுதவித் தொகை ரூ. 10 லட்சத்தில் சிறுதானிய உணவுகள் தயாரிப்பு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
சென்னை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலாளர் ஸ்ரீநிவாசன் திறந்து வைத்தார், கல்லுாரி தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குநர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மையத்தில் சிறுதானிய உணவுகள் தயாரித்தல், ஆடை வடிவமைப்பு பயிற்சி, யோகா பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

