ADDED : மார் 21, 2026 07:13 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சோகோ அறக்கட்டளை, நீதிபதி சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை சார்பில் காந்தி மியூசியத்தில் மனித உரிமைகள் குறித்த ஒருவார கால பயிற்சி நிறைவு விழா நடந்தது.
பயிற்சியில் பங்கேற்ற மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மாணவர்கள் 150 பேருக்கு பொருளாளர் செந்தில்குமார் சான்றிதழ் வழங்கினார். அறக்கட்டளை இணை இயக்குநர் செல்வகோமதி, செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், உதவிப் பேராசிரியை காவேரி கலந்து கொண்டனர்.
