ADDED : ஜன 29, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் சிறுதானிய மதிப்பு கூட்டுதல் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார்.
தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன் முன்னிலை வகித்தனர். டீன் அழகேசன் வரவேற்றார். அரசு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலாளர் வின்சென்ட் பேசினார். சுபாஷினி, மன்னர் கல்லூரி உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை தலைவர் கோபி மணிவண்ணன் பயிற்சி அளித்தனர். ஜன. 30. வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது.