ADDED : டிச 17, 2025 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் அகினோ, தருண், பிரவீன், சஞ்சய், இளங்கோ, தர்சன், முத்தையா, அருண், ஹரி, மார்பான், சஞ்சய்கார்த்திக், விநாயக், கிஷோர் ஆகியோர் கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் உசிலம்பட்டி பகுதி கிராமங்களில் தங்கி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
விவசாயம் சார்ந்த பணியிலும் ஈடுபடுகின்றனர். உசிலம்பட்டி உழவர் சந்தையில் பூச்சிகளை விரட்டுவதற்கான 3ஜி கரைசல் தயாரிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். துணை வேளாண் அலுவலர் குமரப்பன், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சமுத்திரபாண்டியன், உதவி விதை அலுவலர் சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாதரை கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தனர்.

