UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
மதுரை: மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கான மேம்பாட்டு மையம் சார்பில் தொழில்முனைவோருக்கான ‘டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ 5 நாட்கள் பயிற்சி மதுரை டி.வி.எஸ்., கல்பதரு அறக்கட்டளையில் நடந்தது.
டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி தயாரிப்புகள், சேவைகளை சந்தைப்படுத்துதல், வாடிக்கையாளர்களை சென்றடையும் முறைகள், சமூக வலைதளங்களின் மூலம் தொழிலை வளர்த்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு விழாவில் மைய உதவி இயக்குநர் சரவணன் வரவேற்றார். மதுரை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன் தலைமை வகித்தார். தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சுற்றுச் சூழலியல் திட்ட அதிகாரி சந்தர் குமார் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை திட்ட அதிகாரி சரத்குமார் நன்றி கூறினார்.
