UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரி மகளிர் ஆய்வு மையம் சார்பில் இந்திய மகளிர் நெட்வொர்க் நிறுவன (ஐ.டபுள்யூ.என்.,) உறுப்பினர் தொடக்க விழா நடந்தது.
முதல்வர் பாண்டியராஜா வரவேற்றார். கல்லுாரி தலைவர் உமா கண்ணன் தலைமை வகித்து பேசுகையில், தன்னம்பிக்கையுடன் தொடர்புகொள்ளும் திறன், கடின உழைப்பு, தொழில்நுட்ப அறிவு அவசியம். இணையவழியில் தங்களுக்கான அடையாளத்தை உறுப்பினர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
கீர்த்தி ஷோபனா, தொழிலதிபர் ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மகளிர் ஆய்வு மைய இயக்குநர் அருணா நன்றி கூறினார்.
