தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* வால்மீகி ராமாயணம்: நிகழ்த்துபவர் – ரெங்கன் ஜி, லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, சுக்ரீவ பட்டாபிஷேகம், மாலை 4:00 மணி, சீதான்வேஷனம், ஏற்பாடு: அகில பாரத ஸாது சங்கம், இரவு 7:00 மணி.

* ஏகாதசியை முன்னிட்டு ராமநாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 மணி முதல்.

* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் – மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் – திண்டுக்கல் சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* ஏகாதசியை முன்னிட்டு அகண்ட ஹரே ராம மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிராத்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 மணி முதல்.

பள்ளி, கல்லுாரி

* டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பாக விருந்தினர் விரிவுரை: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, முன்னிலை: முதல்வர் ஸ்ரீனிவாசன், செயலாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: ரெட் பிக்சல் டெக்னாலஜீஸ் மேலாண் இயக்குநர் ஷம்மா, வணிக ஆய்வாளர் ஆர்த்தி, காலை 10:00 மணி.

* நிகழ்ச்சி மேலாண்மை, மென்திறன்கள் குறித்து கருத்தரங்கம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மகிழ் நடன ஸ்டுடியோ மேலாண்மை நிறுவனர் சக்திவேல், ஏற்பாடு: தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய வணிகவியல் துறை, காலை 11:45 மணி, உணவு பாதுகாப்பு, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம், சிறப்பு விருந்தினர்: லேசர் சாப்ட் டெக்னாலஜீஸ் தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார், ஏற்பாடு: நுண்ணுயிரியல் துறை, காலை 10:30 மணி.

பொது

* மதுரை தமிழ் இசைச் சங்கத்தின் தமிழ் இசை விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, சென்னை தமிழ் இசைச் சங்கம், ராஜா அண்ணாமலை மன்றம் தமிழ் இசைக் கல்லுாரி மாணவிகளின் ‘அங்கவை சங்கவை’ – நாட்டிய நாடகம், குரு – ஹிமஜா அதுல்குமார், ஒருங்கிணைப்பு: கல்லுாரி முதல்வர் மீனாட்சி, மாலை 6:30 மணி.

* 2026 – 2028க்கான புதிய குழு அறிமுகம்: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், சாலை பிள்ளையார் கோயில் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தினேஷ், சிறப்பு விருந்தினர்கள்: விஷால் புரமோட்டர்ஸ் நிறுவனர் இளங்கோவன், ஸ்ரீமீனாட்சி கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிர்வாகி ஸ்ரீதர், மாலை 6:00 மணி.

* உலக முதியோர் வாரத்தை முன்னிட்டு உணவு வழங்குதல்: மாநகராட்சி முதியோர் இல்லம், தானப்ப முதலி தெரு, மதுரை, ஏற்பாடு: வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், இரவு 7:00 மணி.

விளையாட்டு

* வருவாய் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான எறிபந்து போட்டி: ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் பள்ளி, நாகமலை புதுக்கோட்டை, ஏற்பாடு: பள்ளிக் கல்விதுறை, காலை 8:00 மணி.

* விடுதி மாணவர்களுக்கு மாநில தடகள போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், ஏற்பாடு: மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:00 முதல் 11:00 மணி வரை.

மருத்துவம்

* மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி: அரசு மருத்துவக் கல்லுாரி, மதுரை, தலைமை: டீன் அருள் சுந்தரேஷ் குமார், சிறப்பு விருந்தினர்: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, முதன்மை கல்வி அலுவலர் தயாளன், கல்லுாரி துணை முதல்வர் மல்லிகா, காலை 10:30 மணி.

* இதய மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, இலவச ஆலோசனை வழங்குபவர் – டாக்டர் நிஜாமுதீன், மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

கண்காட்சி

* சிக்னேச்சர் ஜூவல்லரி ஷோ: ஜோஸ் ஆலுக்காஸ், மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us