ADDED : பிப் 08, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது.
போக்குவரத்துத் துறை இணை கமிஷனர் சத்தியநாராயணன் ஆலோசனைப்படி, 108 ஆம்புலன்ஸ் சேவையின் துரிதபணிகள், அவசர காலத்தில் ஓட்டுனர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், விபத்து காலங்களில் செயல்படுவது எப்படி என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மதுரை செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார் விளக்கினார். மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலகநாதன், முரளி, அனிதா, மனோகரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

