நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் நிறுமச் செயலரியல் துறை சார்பில் பங்கு சந்தைகளில் முதலீடு, சமீபத்திய போக்குகள் என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது.
தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் ரங்கராஜ் வரவேற்றார்.
எம்.பி.எம்.,வேர்டெக் செக்யூரிட்டி நிறுவன சித்ராதேவி பேசினார். மாணவி அஸ்வினி நன்றி கூறினார். பேராசிரியர்கள் பியூலா, ஹரிசுதன், அகிலாராணி ஒருங்கிணைத்தனர். மாணவி சுப்புலட்சுமி தொகுத்து வழங்கினார்.