நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் 2,3ம் ஆண்டு மாணவர்களுக்கான தொழில் முறை சான்றிதழுக்கான வழிகாட்டல் பயிற்சி பட்டறை தலைவர் பன்சிதர் தலைமையில் நடந்தது.
செயலாளர் குமரேஷ், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு அலுவலர் ஜெயந்தி வரவேற்றார். முதல்வர் ஸ்ரீனிவாசன் அறிமுக உரையாற்றினார். பயிற்சியாளர்கள் பிரியங்கா, ஸ்ரீதர்ஷினி பேசினர். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். டீன் கவிதா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.