/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில்கள் கால அட்டவணை பயணிகள் எதிர்பார்ப்பு
/
ரயில்கள் கால அட்டவணை பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 13, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு கவுன்டரில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களின் கால அட்டவணை அமைக்க பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இங்கு நின்று செல்லும் ரயில்களின் கால அட்டவணை மட்டும் உள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்களின் கால அட்டவணை இல்லாததால் முன்பதிவு செய்யும்போது பணியாளரிடம் கேட்க வேண்டியுள்ளது. இதனால் பணியாளருக்கு சிரமம் ஏற்படுவதுடன் முன்பதிவிலும் தாமதம் ஏற்படுகிறது. மதுரையிலிருந்து புறப்படும் அனைத்து ரயில்களின் எண்கள், நேரம் குறித்த அட்டவணை வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.