/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பத்திரப் பதிவு அலுவலகம் ஒத்தக்கடைக்கு மாற்றம்
/
பத்திரப் பதிவு அலுவலகம் ஒத்தக்கடைக்கு மாற்றம்
ADDED : ஜூன் 12, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மகால் (தெற்கு) பதிவு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட பதிவாளர் அலுவலகம் (நிர்வாகம், தணிக்கை), இணை சார் பதிவாளர் அலுவலகம் ஆகியன தற்போது '171 அரண்மனைச்சாலை, மதுரை 1', என்ற முகவரியில் உள்ள பாரம்பரிய கட்டடத்தில் இயங்கி வருகிறது.
பொதுப்பணித்துறை சார்பில் இந்த அலுவலகங்களில் ரூ.4 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதனால் தற்காலிகமாக இந்த அலுவலகம், ஒத்தக்கடை ராஜகம்பீரம் பகுதி டி.என்.ஏ.யு., வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பதிவுத் துறை வளாகத்தில் இயங்கும் என மதுரை மண்டல துணைப் பதிவு துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.