ADDED : டிச 21, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அரசரடி மின்வாரிய கோட்டத்தில் மாநகராட்சி வார்டு 68 சொக்கலிங்க நகர் நேதாஜி 5வது தெருவில் கூடுதல் மின்பளு, குறைந்த மின்அழுத்தம் போன்ற குறைபாடுகள் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து மின்வாரிய அரசரடி பகுதி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேற்பார்வை பொறியாளர் சந்திரா, மேற்கு கோட்ட செயற்பொறியாளர் லதா, உதவி செயற்பொறியாளர் சண்முகநாதபூபதி, அறிவுறுத்தலின்படி புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அதனை நேற்று அதிகாரிகள் இயக்கி வைத்தனர். இதையடுத்து மின்அழுத்த குறைபாடு நீங்கியது.

