/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெளிப்படையான பணி நியமனம் பல்கலை பாதுகாப்பு குழு தீர்மானம்
/
வெளிப்படையான பணி நியமனம் பல்கலை பாதுகாப்பு குழு தீர்மானம்
வெளிப்படையான பணி நியமனம் பல்கலை பாதுகாப்பு குழு தீர்மானம்
வெளிப்படையான பணி நியமனம் பல்கலை பாதுகாப்பு குழு தீர்மானம்
ADDED : ஆக 18, 2025 03:08 AM
மதுரை : மதுரை கே.கே.நகரில் மதுரை காமராஜ் பல்கலை எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் பற்றிய பொது உரையாடல் நடந்தது.
பல்கலை பாதுகாப்புக்குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். மூன்று அமர்வுகளில் 'நிதிநிலை வீழ்ச்சியும், விளைவுகளும்', 'ஆசிரியர்-அலுவலர் ஓய்வூதியர் பிரச்னைகள்', 'ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள்' என்ற தலைப்புகளில் விவாதிக்கப்பட்டன
பல ஆண்டுகளாக நிரப்பப்படாத துணைவேந்தர் பதவியை உடனே நிரப்ப வேண்டும். பல்கலையில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் - அலுவலர்களுக்கு ஊதியத்தை உரிய காலத்தில் வழங்க வேண்டும்.
தணிக்கை தடைகளை விசாரிக்க தனிக்குழு அமைத்து விதிமீறல் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 1999ல் ரூ.339 கோடியாக இருந்த தொகுப்புநிதி மானியம் தற்போது ரூ.8 கோடியாக குறைந்தது ஏன், இனி பணிநியமனங்களை வெளிப்படைத்தன்மையுடன் நிரந்தர பணியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பல்கலை பாதுகாப்புக் குழு பொருளாளர் கிருஷ்ணசாமி, எஸ்.சி., எஸ்.டி., பணியாளர் சங்க தலைவர் முனியாண்டி, ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக செயலாளர் பெரியதம்பி, பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, புவனேஸ்வரன், ஜெயச்சந்திரன், சாகுல் ஹமீது, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் செயலாளர் லயோனல் அந்தோணிராஜ் பங்கேற்றனர்.