/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கீமோதெரபி பெற 7 கி.மீ., துாரம் பயணம் புற்றுநோய் சிகிச்சைக்கு அலையும் அவலம் முழுமையான மருத்துவ மண்டலமாக மதுரை மாற்றப்படுமா
/
கீமோதெரபி பெற 7 கி.மீ., துாரம் பயணம் புற்றுநோய் சிகிச்சைக்கு அலையும் அவலம் முழுமையான மருத்துவ மண்டலமாக மதுரை மாற்றப்படுமா
கீமோதெரபி பெற 7 கி.மீ., துாரம் பயணம் புற்றுநோய் சிகிச்சைக்கு அலையும் அவலம் முழுமையான மருத்துவ மண்டலமாக மதுரை மாற்றப்படுமா
கீமோதெரபி பெற 7 கி.மீ., துாரம் பயணம் புற்றுநோய் சிகிச்சைக்கு அலையும் அவலம் முழுமையான மருத்துவ மண்டலமாக மதுரை மாற்றப்படுமா
ADDED : மார் 27, 2025 06:26 AM
மதுரை:' மதுரை அரசு மருத்துவமனை மருத்துவ மண்டலத்தில் புற்றுநோய்க்கு மட்டும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்காமல் பல கி.மீ., தொலைவில் உள்ள இரு வேறு இடங்களில் சிகிச்சைக்கு நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவக் கல்லுாரி அருகில் உள்ள பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தை புற்றுநோய் மண்டல மையமாக மாற்ற வேண்டும்.
மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை துறை, மருத்துவத்துறை மற்றும் கீமோதெரபி பிரிவுகள் செயல்படுகின்றன. புற்றுநோய் கட்டியைப் பொறுத்து அறுவை சிகிச்சைக்கு பின்பும் ரேடியேஷன் எனப்படும் கதிரியக்க சிகிச்சையானது 25 முதல் 40 நாட்கள் வரை புற்றுநோய் கட்டி பாதித்த பகுதியில் செலுத்த வேண்டும். அரசு மருத்துவமனையில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள பாலரெங்காபுரம் புற்றுநோய் மையத்தில் கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலி மிகுந்த இந்த சிகிச்சைக்கு வெளியூர் நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும். கதிரியக்க சிகிச்சை பெறுவதற்கு முன்பாக அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும். அதன்பின் புற்றுநோய் மையம் செல்ல வேண்டும். பாதிக்கப்படும் ஒவ்வொரு நோயாளிக்கும் இது இரட்டை சுமையாக உள்ளது. அனைத்து சிகிச்சை முறைகளையும் ஒரே இடத்தில் உள்ளடக்கிய புற்றுநோய் மண்டலமாக மதுரையை மாற்ற அரசு முன்வர வேண்டும்.
டாக்டர்கள் கூறியதாவது: மகப்பேறு துறை என்றால் குழந்தைப்பேறு, பச்சிளம் சிசு வார்டு, பெண்கள் நல வார்டு இணைந்திருக்கும். கண் பிரிவு தனியாக செயல்பட்டாலும் பிரச்னையில்லை. ஆனால் புற்றுநோய் துறை தனித்துறையாக செயல்பட முடியாது. மகப்பேறு வார்டிலிருந்து கர்ப்ப பை வாய், மார்பக புற்றுநோயாளிகள் இங்கு பரிந்துரைக்கப்படுவர். குழந்தைகள் நலப்பிரிவு, காது மூக்கு தொண்டை, வயிறு இரைப்பை குடல் பிரிவு, தோல்நோய் பிரிவு என அனைத்து வார்டுகளில் இருந்தும் நோயாளிகள் புற்றுநோய் இருந்தால் இந்த வார்டுக்கு தான் வரவேண்டும். அதனால் தோப்பூரில் இடவசதி இருந்தாலும் புற்றுநோய் மண்டல மையத்தை அங்கு அமைப்பதால் நோயாளிகளுக்கு பலனில்லை.
மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி அருகில் பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் ஒன்றே முக்கால் ஏக்கரில் உள்ளது. ஒன்றிரண்டு அலுவலகங்களை தவிர மீதியிடம் பாழடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. மருத்துவக் கல்லுாரியை ஒட்டிய இடம் என்பதால் எளிதாக புற்றுநோய் மண்டல மையமாக இந்த இடத்தை உருவாக்கலாம். புற்றுநோய் பிரிவு முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும். தமிழக அரசு மனது வைத்தால் மதுரையை முழுமையான மருத்துவ மண்டலமாக மாற்றலாம் என்றனர்.