ADDED : ஜன 03, 2026 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் திருப்பரங்குன்றம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி ஜீவசமாதி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா, மஞ்சள் பை வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட தலைவர் கருணாகரன், செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் பெருமாள், மாநில இணைச் செயலாளர் காளையன், செயற்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்கலையரசன் கலந்து கொண்டனர்.

