
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாலத்தில் மரங்களாக வளர்ந்துவரும் செடிகளை இப்போதே அகற்ற நடவடிக்கை தேவை.
மேம்பாலத்தின் வெளிப்புறச்சுவர்களில் பல இடங்களில் செடிகள் வளர்ந்துஉள்ளன. அதில் சில மரங்களாக மாறி வருகிறது. இவை மரங்களாக வளந்து விட்டால் பாலம் பாதிக்கப்படும். அந்நிலையில் அவற்றை அகற்றுவதும் அதிக சிரமத்தை ஏற்படுத்தும்.
மேலும் பாலத்தின் ரோட்டின் இருபுறமும் மணல் குவிந்துள்ளது. இப்பாலத்தில் அடிக்கடி விபத்து நடந்துவிடுவதால், டூவீலரில் செல்வோர்மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். உடனே மணலை அகற்ற நடவடிக்கை தேவை.

