UPDATED : நவ 23, 2026 06:14 PM
ADDED : நவ 23, 2026 06:14 PM
அ நிறம் | அளவு
மேலுார்: குன்னங்குடி பட்டியில் உள்ள பெருங்கற்கால ஈமங்காட்டுக்கு உலக மரபு வாரத்தை முன்னிட்டு சேறல் அமைப்பினர் நடைப் பயணம் மேற்கொண்டனர்.
அமைப்பின் நிர்வாகி தமிழ்த்தாசன் இறந்தோரை அடக்கம் செய்யும் ஈமங்காட்டை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அரசு தேர்வு செய்தது குறித்தும், அமைப்பின் பணிகள் குறித்தும் பேசினார். ஈமங்காட்டில் உள்ள பெருங்கற்கால கல்லறைகள், அதன் தனித்துவம் குறித்து பேராசிரியர் மாணிக்கராஜ் எடுத்துரைத்தார். இதில் நிர்வாகிகள் சிவகுமார், காராளன், அருண், ஜீவா, தங்கம் அடைக்கன் பங்கேற்றனர். நிர்வாகி நாகதேவி நன்றி கூறினார்.
