ADDED : நவ 22, 2025 04:38 AM

மதுரை: மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் தட்சிண ரயில்வே தொழிலாளர் சங்கம் (டி.ஆர்.இ.யூ.,) சார்பில், ஓபன் லைன் பிரிவு செயலாளர் சேதுக்கரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எட்டாவது ஊதியக்குழு அமலாகும் வரை ரயில்வே ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். 8வது ஊதியக்குழுவில் 2026 ஜன. 1 முதல் பென்ஷனை உயர்த்தி வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு உடனடியாக அனுமதியளித்து நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பொதுக்கிளை செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கோட்டத் தலைவர் ராஜூ, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சரவணன், உதவிக் கோட்டத் தலைவர் ஜெயராஜசேகர், ஓபன் லைன் பிரிவு உதவி செயலாளர் சீனிவாசன், கார்டு கவுன்சில் (ஏ.ஐ.ஜி.சி.,) உதவிக் கோட்டத் தலைவர் மருதுபாண்டி, ஓய்வூதியர் சங்க (டி.ஆர்.பி.யூ.,) கோட்ட செயலாளர் சங்கர நாராயணன், ஸ்டேஷன் மாஸ்டர் (ஏ.ஐ.எஸ்.எம்.ஏ.,) சங்க கோட்டச் செயலாளர் பூபாண்டியன் பேசினர். தெற்கு ரயில்வே மாற்றுத்திறனாளிகள் சங்கம், பொறியாளர் சங்கம், ரயில்வே தொழிலாளர் விடுதலை முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

