ADDED : ஆக 21, 2026 08:01 PM
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயிலில் டி.ஆர்.இ.யூ., தொழிற்சங்க பொறியியல் துணை கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்ட உதவித் தலைவர் ஜெயராஜ சேகர் தலைமை வகித்தார். மத்திய சங்க உதவி தலைவர் திருமலை ஐயப்பன், உதவி பொதுச் செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
பொறியியல் பிரிவில் சில தொழிலாளர்கள் பணி செய்யாமல் இருப்பதால் ரயில்வேக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. வனவிலங்கு நடமாட்டம் மிகுந்த புனலுார் – செங்கோட்டை பிரிவில் தொழிலாளர் பாதுகாப்பு கருதி நவீன ரோந்து வாகனங்கள் வேண்டும். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் ஒப்பந்த நியமனத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோட்டத் தலைவர் வினோத் பாபு, செயலாளர் கார்த்திக் சங்கிலி, கிளைச் செயலாளர்கள் சேதுக்கரை, செல்லதுரை, உன்னிகிருஷ்ணன், உதவி கிளைச் செயலாளர் ஸ்ரீனிவாசன், டி.ஆர்.பி.யூ., கோட்ட செயலாளர் சங்கரநாராயணன் பேசினர்.
