ADDED : ஆக 21, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் கண்காணிப்பாளர் ரம்யா சுபாஷினி முன்னிலையில் தீத்தடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.
பக்தர்களின் பாதுகாப்பு, கோயில் சொத்துகளை பாதுகாக்க இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அவசர காலத்தில் தீயணைப்பு கருவிகளை எவ்வாறு கையாள்வது, தீயை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்.
