ADDED : பிப் 07, 2025 04:41 AM
மதுரை : மதுரை 4ம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லுாரியில் முத்தமிழ் மாநாடு நடந்தது.
இயற்றமிழ் அமர்வில் 4ம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்பமுரளி தலைமை வகித்தார். முதல்வர் சாந்தி தேவி முன்னிலை வகித்தார். கவிஞர் செல்லா வாழ்த்தி பேசினார். முன்னாள் பேராசிரியர்கள் ஜெயமூர்த்தி, ஆறுமுகம் பிள்ளை, சீதை அம்மாள், பேராசிரியர் கந்தசாமி பாண்டியன், காந்திகிராம பல்கலை பேராசிரியர் ஆனந்தகுமார், எழுத்தாளர் பாமா பேசினர்.
இசைத்தமிழ் அமர்வில் புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் வேணுகா வாழ்த்தி பேசினார்.தமிழ்ப் பல்கலை மெய்யியல் துறைத் தலைவர் நல்லசிவம், தியாகராஜர் கல்லுாரி ஆய்வாளர் பாலு ஆனந்த், தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லுாரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் சந்திரன் குழுநாட்டுப்புற இசை வழங்கியது.
நாடகத்தமிழ் அமர்வில் நிஜநாடக இயக்கத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செந்தமிழ்க் கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் பூங்கோதை முன்னிலை வகித்தார். துாய நெஞ்சக் கல்லுாரி பேராசிரியர் பார்த்திபராஜா, அமெரிக்கன் கல்லுாரி உதவிப் பேராசிரியர் அரிபாபு பேசினார்.நிறைவு விழாவில் 4ம் தமிழ்ச் சங்கம் செயலாளர் மாரியப்பமுரளி சான்றிதழ் வழங்கினார்.