ADDED : ஏப் 15, 2025 06:38 AM

மதுரை: மும்பை துறைமுக வளாகத்தில் 1944-ம் ஆண்டு சரக்கு கப்பல் தீ விபத்துக்குள்ளானது.
அதில் இருந்த வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியதில் 71 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். இதன் நினைவாக 1950ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.-14-ம் நாள் தீத்தொண்டு நாளாக இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டு உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக இந்தாண்டு 'தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்' என்ற தலைப்பின் கீழ் தீ விழிப்புணர்வு ஏப்.14 முதல் 20 முடிய நடத்தப்பட உள்ளது. நேற்று தல்லாகுளம் தீயணைப்பு அலுவலக வளாகத்தில் உள்ள வீரர்களின் நினைவு சின்னத்திற்கு தென்மண்டல துணை இயக்குநர் ராஜேஷ்கண்ணன், மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன், உதவி அலுவலர்கள் திருமுருகன், பாண்டி, செழியன், சுரேஷ்கண்ணன், குமரேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.