ADDED : மே 20, 2025 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமயநல்லுார்: சமயநல்லுார் - தேனுார் ரோட்டோரம் ஊராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. ஆனால் கிடங்கில் கொட்டாமல் ஆங்காங்கே கொட்டி வருகின்றனர். குறிப்பாக கோழிக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. ரோட்டின் இருபுறமும் குப்பை காடாக காட்சியளிக்கிறது.
குப்பை எரிக்கப்படுவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது.சில நேரங்களில் குப்பையை எரிக்கும் புகையால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற சமயநல்லுார் ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.