ADDED : ஜூன் 16, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை செல்லுார் - குலமங்கலம் ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மீனாம்பாள்புரம் ஆலமரம் அருகே செல்லுார் கண்மாய் ஓடைப்பாலத்தின் கீழ் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள வேம்பு, அரசமரம், ஆலமரம் நெருப்பில் கருகுவதுடன், புகை சூழ்ந்து வாகன ஓட்டிகள், அப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் அபுபக்கர் கூறுகையில், ''மாநகராட்சி அதிகாரிகள் பாலத்தின் மீதுள்ள குப்பை தொட்டியை அகற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டும். பாலத்தின் கீழ் குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், எரிக்கக் கூடாது என எச்சரிக்கை பதாகை வைக்க வேண்டும்'' என்றார்.