ADDED : ஜூன் 17, 2025 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : - சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளியேறும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
அழகம்மாள்: ஆரம்ப சுகாதார நிலைய கழிவு நீர் குழாய்கள் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளதொட்டி போன்ற அமைப்புகளில் சேர்கின்றன. இத்தொட்டியில் கழிவுநீர் நிறைந்து வெளியேறி ரோட்டில் செல்கிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படுகிறது.
இப்பகுதி வழியே ஏராளமான குழந்தைகள் செல்வதால்எளிதில் நோய் தொற்று அபாயமும் உள்ளது.
பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.