
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே சித்தாலங்குடியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
முனியாண்டி: இங்கு ஏராளமான தெரு நாய்கள் உள்ளன. சிலர் அனுமதியின்றி நாய்களை வளர்த்து தெருவில் விடுகின்றனர். இவை நடந்து செல்வோரையும், வாகனங்களில் செல்வோரையும் துரத்திக் கடிக்கின்றன. கூட்டமாக சண்டையிட்டு வாகனங்களுக்குள் விழுவதால் டூவீலரில் செல்வோர் விழுந்து காயம் அடைகின்றனர். தனியாக தெருக்களில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. குழந்தைகளை வெளியில் அனுப்ப அஞ்சுகிறோம். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

