போதை பொருள் கடத்திய த.வெ.க., நிர்வாகிக்கு 'கம்பி'
போதை பொருள் கடத்திய த.வெ.க., நிர்வாகிக்கு 'கம்பி'
ADDED : ஜூலை 10, 2026 12:27 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை அருகே, கீழமாத்துாரில் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக டூ - வீலரில் வந்த இருவர், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது.
விசாரணையில், அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், எஸ்.மேட்டுப்பட்டியை சேர்ந்த த.வெ.க., நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய துணை செயலர் காசிநாதன், 35, மதுரை, செக்கானுாரணியை சேர்ந்த ஜெயக்குமார், 43, என, தெரிந்தது. அவர்களிடம், 12 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்திய டூ - வீலர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். நாகமலை புதுக்கோட்டை போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
