பெண் கூட்டு பலாத்காரம்; ஐந்து பேர் சுற்றிவளைப்பு
பெண் கூட்டு பலாத்காரம்; ஐந்து பேர் சுற்றிவளைப்பு
ADDED : ஜூலை 10, 2026 12:35 AM

மேலுார்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழியை சேர்ந்த, 33 வயது பெண், தற்போது, ராமநாதபுரம் மாவட்டம், தோலுார் சமத்துவபுரத்தில் வசிக்கிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கிறார்.
இந்நிலையில், அனிதா என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர், மதுரை மாவட்டம், மேலுாரில் பாட்டியை பார்த்துக் கொள்ள ஆள் தேவைப்படுவதாக கூறி, ஒருவர் மொபைல்போன் எண்ணை கொடுத்தார். அதில் தொடர்பு கொண்ட அப்பெண்ணிடம், தாமரைபட்டியை சேர்ந்த, 18 வயது வாலிபர், மேலுாருக்கு வருமாறு கூறினார்.
அங்கு சென்ற அப்பெண்ணை, தும்பைபட்டி, வள்ளி குளம் கண்மாய் பகுதிக்கு அவர் அழைத்து சென்றார். அங்கிருந்த வினித், 21, செல்வகுமார், 33, அரவிந்த், 26, வீரபாண்டி, 30, உட்பட ஐந்து பேர் சேர்ந்து அவரை கூட்டு பலாத்காரம் செய்தனர். அவர் அணிந்திருந்த, 4 கிராம் தங்க நகையை பறித்து சென்றனர். மகளிர் இன்ஸ்பெக்டர் மலையரசி, ஐந்து பேரையும் கைது செய்தார்.
