/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊழல், இயற்கை வளங்களை சுரண்டி சொத்துக்களை குவித்த அமைச்சர்கள் த.வெ.க., இணைச் செயலாளர் குற்றச்சாட்டு
/
ஊழல், இயற்கை வளங்களை சுரண்டி சொத்துக்களை குவித்த அமைச்சர்கள் த.வெ.க., இணைச் செயலாளர் குற்றச்சாட்டு
ஊழல், இயற்கை வளங்களை சுரண்டி சொத்துக்களை குவித்த அமைச்சர்கள் த.வெ.க., இணைச் செயலாளர் குற்றச்சாட்டு
ஊழல், இயற்கை வளங்களை சுரண்டி சொத்துக்களை குவித்த அமைச்சர்கள் த.வெ.க., இணைச் செயலாளர் குற்றச்சாட்டு
ADDED : நவ 17, 2025 02:10 AM
மதுரை: ''தமிழகத்தில் ஊழல், இயற்கை வளங்களை சுரண்டிய வகையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என ஒவ்வொருவரும் ரூ. ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளனர்,'' என, மதுரையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஆர்.ஐ.,) கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் இணைச் செயலாளர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.
அவர் பேசியதாவது : கடந்தாண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தீவிர திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏன்.
தமிழகத்தை ஆளும் உரிமை தி.மு.க.,வுக்குத் தான் உள்ளது என மன்னராட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். தமிழகம் உங்களுக்கு குத்தகைக்கா விடப்பட்டுள்ளது. இதுபோன்ற மனப்போக்கு கொண்ட இந்த ஆட்சியை மாற்ற வேண்டும். இதற்கு ஒவ்வொருவருக்கும் ஓட்டுரிமை மிக அவசியம்.
வழக்கமான பணிகளுக்கு இடையே எஸ்.ஐ.ஆர்., பணியையும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மேற்கொள்கின்றனர். ஆசிரியர்களை இந்த அரசு கொத்தடிமைகளாக பார்க்கிறது. திட்டமிடாத எஸ்.ஐ.ஆர்., பணியால் தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேலான வாக்காளர்கள் ஓட்டுரிமையை இழக்கும் ஆபத்து ஏற்படும். இளைஞர்களின் ஓட்டுக்களை தமிழக அரசு குறிவைத்து நீக்குகிறது.
தி.மு.க.,வில் மதுரை மேயராக இருந்தவரும் அவரது கணவரும் ரூ.200 கோடிக்கும் மேல் வரி முறைகேடு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் இ.டி., ஐ.டி., ரெய்டுகளில் அமைச்சர்கள் சிக்க உள்ளனர். தன் பெயரை சொல்லக் கூடாது என தடை உத்தரவு பெற்ற 10 ரூபாய் பாட்டில் கம்பெனிக்காரர் ஒருவர் மற்றும் மதுரையில் மூர்த்தி உட்பட ஒவ்வொரு அமைச்சரும், எம்.எல்.ஏ.,க்களும் ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து குவித்து வைத்துள்ளனர். மண், கல் குவாரி உள்ளிட்ட இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

