/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்லுப்பட்டியில் தீவிர கொசுக்கடி
/
கல்லுப்பட்டியில் தீவிர கொசுக்கடி
ADDED : நவ 17, 2025 02:11 AM
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டியில் கொசு உற்பத்தி அதிகரித்து விட்டதால் மக்கள் துாக்கமின்றி தவிக்கின்றனர்.
சாக்கடை கால்வாய் துார் வாருவதில் பேரூராட்சி மெத்தனமாக செயல்படுவதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பேரூராட்சி குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடைகளுக்குள் கடத்தப்படுகிறது. இதில் குப்பை கொட்டப்படுவதால் கழிவு நீர் தேங்கி நின்ற, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
இதனால் பேரூராட்சி பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பேரூராட்சியில் கொசு மருந்து ஓராண்டுக்கும் மேலாக தெளிக்கவில்லை. சாக்கடை கால்வாய்கள் பல மாதங்களாக துார்வாரப்படாமல் உள்ளது.
கழிவுகளை முழுமையாக அகற்றாமல் மேலாக கிடக்கும் பாலிதீன் கவர்களை மட்டும் துாய்மை பணியாளர்கள் அகற்றுவதால் மண் மேவி விட்டது. நோய் பரவும்முன் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

