/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
த.வெ.க., மதுரை மாநாடு பணிகள் துவக்கம்
/
த.வெ.க., மதுரை மாநாடு பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 23, 2025 07:14 AM
மதுரை : த.வெ.க., இரண்டாவது மாநில மாநாடு ஆக. 25 ல் மதுரையில் நடக்கும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்த நிலையில், போலீசார் இன்னும் அனுமதி வழங்காத போதும் மாநாட்டுக்கான பந்தல் பணிகள் நேற்று துவங்கியது.
மதுரை- -- துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு ஜூலை 16 காலை 7:00 மணிக்கு பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் பந்தக்கால் அமைக்கப்பட்டது. மாநாட்டுக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி போலீஸ் எஸ்.பி., அரவிந்தை சந்தித்து ஆனந்த் மனு கொடுத்தார். இந்நிலையில் மாநாடு அமைக்கும் இடத்தை சுத்தம் செய்யும் பணியை த.வெ.க.,வினர் நேற்று துவக்கினர். மாநாட்டுக்கு போலீசார் அனுமதி வழங்கப்படாத நிலையில் மேடை அமைப்பதற்கான பலகைகள், இரும்பு பேரிகாட் (தடுப்புகள்), கூடாரம் கொண்டு வரப்பட்டு பணி துவங்கப்பட்டது.