/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு போதையில் வந்த த.வெ.க., தொண்டர்
/
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு போதையில் வந்த த.வெ.க., தொண்டர்
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு போதையில் வந்த த.வெ.க., தொண்டர்
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு போதையில் வந்த த.வெ.க., தொண்டர்
ADDED : ஆக 23, 2025 05:45 AM
மதுரை: மதுரை த.வெ.க., மாநாட்டிற்கு வந்த தொண்டர் ஒருவர், போதையில் திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் செல்ல முயன்றார். அவரை போலீசார் தடுத்தனர்.
மதுரை பாரபத்தியில் நேற்றுமுன்தினம் த.வெ.க.,வின் மாநாடு நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் காலை முதலே வரத்தொடங்கினர். கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த தொண்டர் ஸ்ரீதர் 28, நண்பர்களுடன் காலை 7:45 மணிக்கு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வந்தார்.
போலீசார் சோதனையில் அவர் குடிபோதையில் இருந்தது தெரிந்தது. பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் மாதவ்பகவத்சிங், ஏட்டு மாயக்காள் தடுத்தனர். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்ரீதர், அவதுாறாக பேசினார். அருகில் இருந்தவர்கள் அவரை அழைத்துச் சென்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.