/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விபத்தில் இறந்தவர் த.வெ.க., தொண்டர்
/
விபத்தில் இறந்தவர் த.வெ.க., தொண்டர்
ADDED : ஆக 28, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : சூரப்பட்டியைச் சேர்ந்த வி.ஏ.ஓ., அழகு ராஜன் 42, கொட்டாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதில் ஆக. 22 அதிகாலை நான்கு மணி அளவில் சூரப்பட்டி புதுார் விலக்கருகே அடையாளம் தெரியாதவர் வாகனம் மோதியதில் இறந்தார் எனக் குறிப்பிட்டிருந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் மேலுார் அரசு மருத்துவமனைக்கு வந்தவர்கள் இறந்தவர் வேலுார் கஸ்பாவை சேர்ந்த மாதவன் 41, என்பதும் ஆக. 21 மதுரையில் நடந்த த.வெ. க., மாநாட்டில் பங்கேற்க வந்தவர் எனவும் தெரிவித்தனர். கொட்டாம்பட்டி போலீசார் உடலை உறவினரிடம் ஒப்படைத்தனர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

